மனைவியைக் கொன்று துண்டு போட்ட மாஜி ராணுவ வீரர்; உடலை குக்கரில் வேகவைத்த `பகீர்' சம்பவம்!

2 hours ago
ARTICLE AD BOX

ஐதராபாத்தில் வசிப்பவர் குருமூர்த்தி. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குருமூர்த்தி, செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மாதவியை கடந்த 18ம் தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து மாதவியின் பெற்றோர் குருமூர்த்தியிடம் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து மாதவியை காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலிஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குருமூர்த்தியிடம் விசாரித்தபோது உறவினர் ஒருவரை பார்க்க செல்வது தொடர்பாக தன்னுட்ன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாக குருமூர்த்தி தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சை நம்பாத போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். தீவிர விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை குருமூர்த்தி ஒப்புக்கொண்டார்.

கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், தடயங்களை அழிக்க மனைவியின் உடலை வீட்டு பாத்ரூமில் வைத்து துண்டுகளாக வெட்டி, அதனை சமையல் செய்ய பயன்படும் குக்கரில் வைத்து வேக வைத்ததாக தெரிவித்துள்ளார். அதோடு எலும்பை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்து அனைத்தையும் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று ஏரியில் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடலை வெட்டி முழுவதுமாக வேகவைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டதாக அவர் போலீஸில் தெரிவித்துள்ளார். குருமூர்த்தி சொன்ன ஏரியில் போலீஸார் மோப்ப நாய்களின் துணையோடு உடல் பாகங்கள் இருந்த பேக்கை தேடினர். ஆனால் இது வரை கிடைக்கவில்லை.

இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு இக்கொலையை குருமூர்த்தி செய்துள்ளார். உடல் பாகங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து தேடி வருகின்றனர். குருமூர்த்தியை தங்களது காவலில் எடுத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article