ARTICLE AD BOX
Maha Kumbh Murder : உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில் கடந்த சில வாரங்களாக பிரம்மாண்டமான அளவில் நடைப்பெற்று வருகிறது. 144 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். இங்கு நடக்கும் சில விஷயங்கள் பார்ப்பதற்கே வினோதமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பல்வேறு விஷயங்களும் நடக்கின்றன. இப்போது, அங்கு ஒரு கொலையே நடந்து விட்டது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
கும்பமேளாவில் நடந்த கொலை!
கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக, டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதியினர் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜிற்கு வந்திருக்கின்றனர். மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர். அதனை தங்களது பிள்ளைகளுக்கும் அனுப்பியிருக்கின்றனர். இரவில் தங்குவதற்காக ஒரு விடுதியை எடுத்து இவர்கள் தங்கியிருக்கின்றனர். ஆனால், காலையில் எழுந்து பார்க்கும் போது அந்த பெண்ணின் உடல், தங்கியிருந்த ஓட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.
48 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த போலீஸார்..
கும்பமேளாவிற்கு புனித நீராட வந்த ஒரு பெண், இப்படி ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷயம், போலீஸாரின் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய இவர்கள், கொலையாளி அந்த பெண்ணின் கணவன்தான் என்பதை கண்டுபிடித்தனர். 48 மணி நேரத்தில் தேடுதல் வேட்டைக்கு பிறகு, அவரை ஜுன்சி எனும் இடத்தில் அவரை கைது செய்திருக்கின்றனர்.
தேடி வந்த மகன்கள்..
பிப்ரவரி 19ஆம் தேதியன்று, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக ஒரு தனியார் விடுதியில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அந்த பெண் கூரான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அந்த தங்கும் விடுதியில் இருப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அப்போது அந்த பெண், கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு ஒரு ஆணுடன வந்ததாகவும், அவர்களின் அடையாள அட்டைகளை வாங்காமல் அங்கு அவர்களுக்கு ரூம் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.
பின்னர், அந்த பெண்ணின் போட்டோவை சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியிட்டிருக்கின்றனர். பிப்ரவரி 21ஆம் தேதி இந்த பெண் அசோக் குமார் என்பவருடைய மனைவி என்பதும், இவர் பெயர் மீனாட்சி என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அப்பெண்ணை தேடி வந்த அவரது மகனும், சகோதரரும் தெரிவித்திருக்கின்றனர்.
கொலைக்கான காரணம்..
அசோக் குமாரை பிடித்து விசாரித்த போலீஸார், தன் மனைவியின் கொலையை 3 மாதங்களாக தான் திட்டமிட்டதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறார். இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை துண்டிக்கவில்லை என்றால் அனைவரிடமும் சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என தனது மனைவி கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மகா கும்பமேளாவிற்கு வந்த பின்பு, ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது சம்பவம் நடந்த இரவு இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது மீனாட்சி கழிவறைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்திய அசோக் அவரை பின்னால் இருந்து தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து இருக்கிறார். பின்னர், ரத்தம் படிந்த தனது ஆடையை மாற்றிய அவர் கொலை செய்த ஆயுதத்தை அப்புறப்படுத்தி இருக்கிறார்.
தன் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் தனது மகன்களுக்கு போன் செய்து மீனாட்சியை மகா கும்பமேளா கூட்டத்தில் தொலைத்து விட்டதாக கூறியிருக்கிறார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். போலீஸார் சிசிடிவி காட்சிகள், மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த சில தடையங்களை வைத்து கொலையாளியை பிடித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | முதலீடே இல்லாமல் 1 வாரத்தில் 40 ஆயிரம் சம்பாதித்த இளைஞன்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | மகா கும்பமேளாவின் பேரழகியா இது.. ரசிகர்கள் அதிர்ச்சி! மோனாலிசாவின் Fake வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ