மனைவி மற்ற ஆண்களுடன் ஆபாசமாக பேசுவதை எந்த கணவராலும் பொறுக்க முடியாது.. ம.பி ஐகோர்ட் கருத்து!

23 hours ago
ARTICLE AD BOX

மனைவி மற்ற ஆண்களுடன் ஆபாசமாக பேசுவதை எந்த கணவராலும் பொறுக்க முடியாது.. ம.பி ஐகோர்ட் கருத்து!

India
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

போபால்: "தனது மனைவி மற்ற ஆண்களுடன் ஆபாசமாக பேசுவதை எந்தக் கணவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

Madhya pradesh Court

தனது கணவரின் விவாகரத்து மனுவை ஏற்று, விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட குடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட் நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தனது பாலியல் வாழ்க்கையைப் பற்றி சாட் செய்து கொண்டிருந்ததாக கணவன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆணோ பெண்ணோ தங்கள் நண்பர்களுடன் ஆபாசமான உரையாடல்களில் ஈடுபடக்கூடாது என்றும், எந்த கணவனாலும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற அரட்டைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

"எந்தவொரு கணவரும் தனது மனைவி இதுபோன்ற மோசமான அரட்டைகள் மூலம் மொபைல் மூலம் உரையாடுவதை பொறுத்துக்கொள்ள மாட்டார். திருமணத்திற்குப் பிறகு கணவன்- மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல், சாட் மற்றும் பிற வழிகளில் உரையாட சுதந்திரம் பெற்றுள்ளனர். ஆனால் உரையாடலின் அளவு கண்ணியமாக இருக்க வேண்டும், குறிப்பாக எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது, ​​இது வாழ்க்கைத் துணைக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கக்கூடாது.

ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றபோதிலும், கணவன் அல்லது மனைவி அத்தகைய செயலைத் தொடர்ந்தால், அது நிச்சயமாக மற்ற துணைக்கு மனரீதியான கொடுமையை ஏற்படுத்தும்." எனக் கருத்து தெரிவித்து, விவாகரத்து வழக்கில் கீழ் கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இந்த ஜோடி கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கணவர் கொஞ்சம் காது கேளாதவர், திருமணத்திற்கு முன்பே இந்த உண்மை மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் இதுதொடர்பாக தனது தாயிடம் கடுமையாகப் பேசத் தொடங்கினார் என்றும், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அவர் தமது வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் கணவர் குற்றம் சாட்டினார்.

மேலும், திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் தனது பழைய காதலர்களுடன் மொபைலில் பேசுவாள் என்றும் கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆபாசமாக இருந்தன என்றும் கணவர் குற்றம்சாட்டினார்.

அதேசமயம், கணவர் சொல்லும் ஆண்களுடன் தனக்கு அப்படி எந்த தொடர்பும் இல்லை என்று மனைவி கூறினார். மேலும், கணவர் தனது மொபைல் போனை ஹேக் செய்து, தனக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்க அந்த 2 ஆண்களுக்கும் செய்திகளை அனுப்பியதாகவும் அவர் கூறினார். மேலும், தனது தொலைபேசியிலிருந்து சாட் ஹிஸ்டரியை பெற்ற தனது கணவர் தனது பிரைவசியை மீறியதாகவும் அவர் வாதிட்டார். மேலும், தனது கணவர் தன்னை அடித்து ரூபாய் 25 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

எனினும், தனது மகள் ஆண் நண்பர்களுடன் பேசும் பழக்கம் கொண்டவர் என்பதை அந்தப் பெண்ணின் தந்தையே ஒப்புக்கொண்டதாக உயர் நீதிமன்றம் கண்டறிந்தது. இதனால், அந்த கணவரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக ஏற்றுக்கொண்டு, விவாகரத்து வழங்கும் குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.

More From
Prev
Next
English summary
“No husband would tolerate that his wife is in conversation through mobile by way of these type of vulgar chatting." said Madhya Pradesh High court in family case.
Read Entire Article