மனைவி மகளை பிரிந்து வாழும் மிஷ்கின்.. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் சூப்பர்!

3 hours ago
ARTICLE AD BOX

மனைவி மகளை பிரிந்து வாழும் மிஷ்கின்.. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் தான் சூப்பர்!

News
oi-Jaya Devi
| Published: Monday, February 3, 2025, 22:02 [IST]

சென்னை: அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயக்குனர் மிஷ்கின் அவர்களின் வழக்கம். அண்மையில் பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மதுப்பழக்கம் குறித்து பேச தொடங்கிய இவர். சில, ஆபாசமான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அனைவர் இடத்திலும் மன்னிப்பு கேட்டார்.

அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மிஷ்கின், வாழ்க்கை குறித்து தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கான காரணம் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார். நான் மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணம் சினிமா தான். சினிமா மீது தீராத காதல் இருந்ததால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போனது. அதுவே நாளடைவில் எனக்கும், என் மனைவிக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தி இருவரும் பிரிய காரணமாக அமைந்துவிட்டது

mysskin wife interview

மனைவி தேவையில்லை: நான் என் மனைவியிடம் ஒருமுறை விவகாரத்து செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன், அதற்கு அவர்கள் நான் கொடுக்க முடியாது என்று சொல்லி மிகவும் அழுதுவிட்டார். அதிலிருந்து, நான் விவகாரத்தை கேட்கவில்லை. ஏனென்றால் எனக்கு நியாயம் புரிந்தது. அதனால் நாங்கள் இரண்டு பேரும் தள்ளி நின்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் என் மகளை அவங்களிடம் கொடுத்துவிட்டேன். என் மகளிடம் அம்மாவை நீ பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டேன். இப்போது நான், சினிமாவை கல்யாணம் செய்து கொண்டேன். எனக்கு மனைவி தேவையில்லை எனக்கு சினிமா போதும் என்று அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

பிசாசு 2: சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என அடுத்தடுத்து வித்தியாசமான படத்தை இயக்கினார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. இயக்குநராக இருந்த மிஷ்கின் மாவீரன், லியோ போன்ற படத்தில் நடித்து நடிகராகவும் மாறினார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Mysskin reveals the reason for his separation from his wife, இயக்குனர் மிஷ்கின் தனது மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்
Read Entire Article