“இது பாகுபலி மாதிரியான படமல்ல, ஆனால்...” - ‘எஸ்டிஆர் 50’ குறித்து சிம்பு!

2 hours ago
ARTICLE AD BOX

Published : 03 Feb 2025 11:45 PM
Last Updated : 03 Feb 2025 11:45 PM

“இது பாகுபலி மாதிரியான படமல்ல, ஆனால்...” - ‘எஸ்டிஆர் 50’ குறித்து சிம்பு!

<?php // } ?>

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக எனது 50-வது படம் இருக்கும் என்று சிம்பு உறுதியாக தெரிவித்துள்ளார்.

தனது 50-வது படத்தினை தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படம் தொடர்பாக சிம்பு, "எனது 50-வது படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அதனால் தான் இதே கெட்டப்பில் இருக்கிறேன். அது நல்லபடியாக வந்துவிட்டால் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதன் பட்ஜெட் என்பது மிகவும் பெரியது. இப்போது ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் விற்பனை இறக்கத்தில் உள்ளது. அதனால் தான் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்.

இது பாகுபலி மாதிரியான படமல்ல. ஆனால் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும். இதன் படக்குழுவினர் யாருக்குமே இதுவரை ஒப்பந்தம் கூட போடவில்லை. இதிலிருந்தே தமிழ் சினிமாவை எவ்வளவு காதல் கொண்டுள்ளார்கள் என்பது தெரியும். இந்தப் படம் நமது திரையுலக வாழ்வில் என்ன பண்ணப் போகிறது என்பதை பற்றி கவலைப்படவில்லை. சரியாக போகவில்லை என்றால் என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை.

இப்படம் வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணிபுரியவுள்ளோம். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன், இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளேன். இது எனது கடமை. எனது ரசிகர்களுக்காக மட்டுமன்றி அனைத்து ரசிகர்களுக்காகவும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் 50-வது படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதனை சிம்பு தயாரிக்கவுள்ளார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article