தமன்னாவின் கைப்பை ரூ.3 லட்சம்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: இந்திக்கு சென்ற தமன்னா அங்கு நடிக்கும் படங்களில் பாடல்களில் உச்சபட்ச கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில்கூட ‘ஸ்த்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார். அந்த நடனத்துக்காக அவர் ஒரு கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கினார் என்று ஒரு தகவல் ஓடியது கவனிக்கத்தக்கது. ஆனால் அது குறித்து தமன்னா எதுவும் வாயை திறக்கவில்லை.

நடிகைகள் பெரும்பாலும் தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் பிராண்டட்டாக இருக்க வேண்டும் என்றே அதன்படி பயன்படுத்துவார்கள். இந்நிலையில் தமன்னா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் பிராண்டட் கம்பெனியை சேர்ந்தது. அதன் விலை மட்டும் சுமார் மூன்று லட்சம் ரூபாயாம். இதனைகேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு கை பையின் விலை மூன்று லட்சமா? அப்படி அதில் என்ன ஸ்பெஷல் இருக்கும் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

 

Read Entire Article