மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

3 hours ago
ARTICLE AD BOX

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட மனித அமைப்பிலான (ஹியூமனாய்டு) ரோபோக்களின் குழு ஒன்றின் கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

அப்போது, குழுவிலிருந்து விலகிய ரோபோ ஒன்று அதன் எதிரில் ஆராவாரம் செய்து கொண்டிருந்த மனிதர்களை நோக்கி நகர்ந்து மோதுவதைப் போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிக்க: ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

AI ROBOT ATTACKS CROWD AT CHINESE FESTIVAL

A humanoid robot suddenly stopped, advanced toward attendees, and attempted to strike people before security intervened.

Officials suspect a software glitch caused the erratic behavior, dismissing any intentional harm.

This comes… pic.twitter.com/xMTzHCYoQf

— Mario Nawfal (@MarioNawfal) February 25, 2025

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த ரோபோவை தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தனர். இணையவாசிகள் சிலர் அந்த ரோபோ மனிதர்களைத் தாக்க முற்பட்டதாகக் கூறி கருத்து பதிவிட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சாதாரன தொழில்நுட்பக் கோளாறினால் அது இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு லண்டனில் ஏஐ தொழில்நுட்பத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட விமானப்படை டிரோன் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது அதனை இயக்கிய மனிதரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் ஏஐ தொழில்நுட்பத்தின் மீதான மனிதர்களின் பயத்தை அதிகரிப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article