ARTICLE AD BOX
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 – 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா அப்பாராவ்வின் ‘தேசமாண்டே..,’ எனும் பாடலை கூறி, அதன் விளக்கமான ‘நாடு என்பது வெறும் மண் அல்ல, மக்கள்’ என்று மேற்கோள்காட்டி இதுவே பட்ஜெட்டின் சிறப்பு அம்சம் என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிறகு, ” பட்ஜெட்டில் வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம், ஒழுங்குமுறை ஆகிய 6 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகில் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.” என குறிப்பிட்டார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள் :
- பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தின் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
- அசாமில் யூரியா உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்படும்.
- இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான வர்த்தக மையமாக மாற்றப்படும்.
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் தாமரை உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்.
- சுகாதாரம் மற்றும் வேளாண்துறையில் AI தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.
- பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை மையமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.