ARTICLE AD BOX
வயநாடு நிலச்சரிவில் உயிர்பிழைத்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இதுவரை மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை என்றாலும், முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் பெறப்பட்ட நிதி உயிர்பிழைத்தவர்களுக்கு உதவும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
நிலச்சரிவு மறுவாழ்வுக்காக மத்திய அரசிடம் முதலில் ரூ.2,221 கோடி மாநிலம் கோரியதாகவும், ஆனால் பேரிடருக்குப் பின்னர் தேவைகள் மதிப்பீடு செய்த அறிக்கையின்படி, இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.
வயநாடு நிலச்சரிவை 'கடுமையான இயற்கை பேரழிவு' என மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் ரூ. 1 கோடி வரை நன்கொடை அளிக்கலாம், மேலும் உதவி கோரி நாட்டிலுள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, வயநாடு தொகுப்பூதியத்திற்குப் பெறப்பட்ட தொகை குறித்து யுடிஎப் எம்எல்ஏ குருக்கோளி மொய்தீன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வரைவுப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது, நகர்ப்புறத்தில் உள்ள வீடுகளில் மறுவாழ்வு அளிக்கப்படும், இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
சிஎம்டிஆர்எஃப்-ல் பெறப்படும் நிதி, பேரிடர் பாதிப்புக்குள்ளானவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும், மறுவாழ்வுப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் விஜயன் உறுதியளித்தார்.
யுடிஎப் எதிர்க்கட்சியால் எழுப்பப்பட்ட மற்றொரு பிரச்னை, நிலச்சரிவில பலத்த காயமடைந்தவர்கள், பேரழிவு நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகும் சிகிச்சைக்கான செலவைப் பெறவில்லை என்றும், இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிரச்னைகளுக்கு பதிலளித்த விஜயன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
வயநாடு மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூலை 30 நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்காக கல்பெட்டாவில் உள்ள எல்ஸ்டோன் எஸ்டேட்டில் 58.50 ஹெக்டேர், மேப்பாடி பஞ்சாயத்தில் உள்ள நெடும்பாலா எஸ்டேட்டில் 48.96 ஹெக்டேரில் மாதிரி நகரங்களை உருவாக்குவதற்கான மறுவாழ்வுத் திட்டத்தை அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை என்று முதல்வர் கூறியுள்ளார்.