ARTICLE AD BOX
இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடுதலை -2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான தி ஸ்மைல் மேன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(ஜன. 24) வெளியாகிறது.
சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான திரு.மாணிக்கம் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
மலையாள நடிகர் மோகன் லால் இயக்கி நடித்த பரோஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
மாதவன் நடிப்பில் வெளியான ஹிந்தி மொழிப்படமான ஹிசாப் பாரபர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகர் பரத்தின் ஒன்ஸ் அபான் தி டைம் இன் மெட்ராஸ் திரைப்படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. பாபி சிம்ஹாவின் ரஜாகர் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் நடிகர்கள் குணநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் அலங்கு. இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.