ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து இருக்கிறது. அதேபோல இந்த போட்டியை வென்று பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டியானது இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நாக்கவுட் போட்டி குறித்து பேசி உள்ளார். அதாவது மற்றவர்களிடம் அறை வாங்குவது கூட எனக்கு பயமில்லை. மஞ்சள் ஜெர்சி போட்டவர்களிடம் தோற்பது தான் எனக்கு பயம்” என்று கூறியுள்ளார்.