ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியிலாவது வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டிலும் நல்ல தரமான வீரர்கள் இருக்கும் நிலையில் இரண்டு அணியும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பான முறையில் இருக்கிறார்கள். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.
தற்போது துபாய் மைதானத்தில் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்துவரும் நிலையில் டிராவிஸ் ஹெட் இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் முதலில் அவரை வீரர்கள் அவுட் ஆக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படி அடுத்தடுத்து பவுண்டரி சிக்சர் என விலாசிய ஹெட் 39 ரன்கள் வரை எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை அடித்தபோது அதனை கில் கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார். மேலும் டிராவிஸ் ஹெட் அவுட் ஆனதால் தற்போது இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.
𝐘𝐄𝐒𝐒𝐒𝐒!! 𝐓𝐑𝐀𝐕𝐈𝐒 𝐇𝐄𝐀𝐃 𝐈𝐒 𝐎𝐔𝐓!!!
Varun Chakaravarthy strikes in his very first over, removing the big fish for 39!
What a massive moment in the match!
– 54/2 (8.2)#TravisHead #AUSvIND #ChampionsTrophy #Sportskeeda pic.twitter.com/vLjskFk8CK
— Sportskeeda (@Sportskeeda) March 4, 2025