ARTICLE AD BOX
மதுரை உணவுகளுக்கு என்று தனி சிறப்பு ஒன்று உள்ளது. டேஸ்ட்களுக்கும் புதுவகையான ட்ஷ்களுக்கும் பெயர்போன ஊர் என்றால் அது மதுரை தான். அப்படி மிகவும் பேமஸான மதுரை ஸ்டைல் உணவு ஒன்றை பற்றி தான் ஹோம் குக்கிங் தமிழ் சேனலில் ஹேமா சுப்ரமணியன் கூறி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நறுக்கப்பட்ட வெங்காயம்
நறுக்கப்பட்ட பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலைகள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
மிளகு
உப்பு
முட்டை - 1
எண்ணெய்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். அடுத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். கட்டி இல்லாமல் மசாலாக்கள் கரையும் வரை கலக்க வேண்டும். அப்போது தான் நன்றாக இருக்கும்.
இப்போது ஒரு தாளிக்கும் கரண்டில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேறிய பிறகு அதில் இந்த முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் வேகும் வரை சமைக்கவும். தாளிப்பு கரண்டியில் செய்யும்போது ஆம்லெட் வட்டமாக நன்றாக வரும். உங்களுக்கு தேவை பட்டால் வேறு ஒரு கரண்டியில் கூட செய்யலாம்.
கரண்டி ஆம்லெட் | Karandi Omelette Recipe in Tamil
இதனை மதிய நேர உணவுக்கு சைடு டிஷாக செய்யலாம். சுவையாக இருக்கும். எப்போதும் ஆம்லெட் போடுவது போல் இல்லாமல் கொஞ்சம் வேறுமாதிரி இனி ஆம்லெட் செய்து கொடுங்கள்.