வான் மண்டலம் மாசுபடாமல் இருக்க நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இவை..!!

2 hours ago
ARTICLE AD BOX

நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம்….

10 விழுக்காடு மட்டுமே நினைத்துப் பார்க்கின்றார்கள் பூமியில் வெப்பம் அதிகரித்து காண்பதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பது தான்…

பூமியில் வெப்பம் அதிகமாகவதால் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது, வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்கிறார்கள் பூமியில் பிறந்ததற்க்கு ஒரு மரத்தையாவது நாம் வளர்த்து விட்டு போக வேண்டும். நாம் எந்த ஒரு பெரிய சாதனைகளையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தால் போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் உயிர் வாழ்வு ஆக்ஸிஜன் அதிகரித்து விடும். வாகனங்களுக்கு வருடம் தோறும் புகை பரிசோதனை செய்யப்படுகிறது சுற்றுப்புற தூய்மைக்கு எல்லாம் அபராதம் போட்டால் தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் தலைமுறையினர் உடல் குறைகளோடு தான் பிறப்பார்கள். நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய்ப்பாலின் கலப்படம் செய்தால் அதற்கு பயனில்லையோ அதே போல் தான் தண்ணீரில் கலப்படம் செய்தால் பயன்படுத்த முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது அந்த தண்ணீரையும் மாசுபடுத்தி வருகிறோம். நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசுபடுத்தி விட்டோம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடியவில்லை. ஆற்றில் இருந்து மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகி கொண்டு போகிறது. மேலும் தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக்கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடிநீரை எடுத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்….

புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழைநீர் சேகரிப்பு அவசியமாகிறது ஆண்டாண்டிற்கு மழை நீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும். இன்று உலகமே காற்று மாசினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது குழந்தைகள் 20% சுவாச கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு வளிமண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமயமாதல் துவங்கி பணி உருகி கடல் நீர்மட்டம் உயர்வது வரை தொடர்கின்றது இந்த சிக்கல்கள். அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி இனி வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைத்தால் மட்டும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்திட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்..!!

Read Entire Article