ARTICLE AD BOX
மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் தேசிய நலக்குழுமத் திட்டத்தில் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma in Computer Application படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை – 20, பிரிவு பொது – 8.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.