ARTICLE AD BOX
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த பிப்.28ம் தேதி வெளியிட்ட அரசாணை எண்:28 ன்படி சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் உயர்த்தப்படும் மாற்றங்கள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
The post மண்டலங்கள் அதிகரிப்பு மக்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.