மணிரத்னம் முதல் சுந்தர்.சி வரை! 90 களில் தொடங்கி இன்று வரை நிலைத்திருப்பது எப்படி?

1 day ago
ARTICLE AD BOX

மணிரத்னம் முதல் சுந்தர்.சி வரை! 90 களில் தொடங்கி இன்று வரை நிலைத்திருப்பது எப்படி?

Television
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

இன்றைய புதிய இயக்குநர்கள் இரண்டு படங்களுக்கு மேல் நிலைத்து பயணிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர். ஆனால் 90களில் அறிமுகமாகி, இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து பணியாற்றும் சில முக்கிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இடம்பிடித்துள்ளனர். தங்கள் தனித்துவமான கதை சொல்லல், பரிணாம மாற்றங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகின்றனர். தமிழ் திரைத்துறையில் நீடித்து மகத்தான இடத்தை பிடித்துள்ளனர்.

television cinema

மணி ரத்னம்

மணி ரத்னம் 80களிலேயே மௌன ராகம், நாயகன் போன்ற திரைப்படங்கள் மூலம் தனித்துவமான இயக்குநராக உயர்ந்தார். 90களில் தளபதி, ரோஜா, பம்பாய், இருவர் போன்ற படங்களை வழங்கி, இந்திய சினிமாவில் தனி முத்திரை பதித்தார். அவரது திரைக்கதைகள், ஒளிப்பதிவு, பின்னணி இசை பயன்படுத்தும் விதம் அனைத்தும் அழகிய கலைநயத்தைக் கொண்டவை. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், இன்னும் புதிய உன்னத முயற்சிகளால் தமிழ் சினிமாவின் பரிமாணங்களை மேம்படுத்தி வருகிறார்.

ஷங்கர்

1993-ஆம் ஆண்டு ஜென்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், தமிழ் சினிமாவின் மிகப் பெரிய மாஸ், வணிகமயம் கொண்ட படம் எடுக்கும் இயக்குநராக மாறினார். காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றது. அவர் இயக்கிய எந்திரன் (2010) மற்றும் 2.0 (2018) இந்திய சினிமாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப படைப்புகளில் ஒன்றாக உயர்ந்தன. தற்போது இந்தியன் 2, Game Changer படங்கள் மூலம் இன்றும் தனக்கான களத்தில் வெற்றியோடு பயணிக்கிறார்

television cinema

பாலா

இயக்குநர் பாலா 90களின் இறுதியில் சேது (1999) மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் புதுமையான கதைக் களங்களையும், தீவிரமான கதாபாத்திரங்களையும் கொண்டு வந்தார். நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற திரைப்படங்கள், இயற்கையை ஒத்த நடிப்பு, ஆழமான கதைகள், வாழ்வின் கடுமைகளை வெளிப்படுத்தும் திரைக்கதைகள் ஆகியவை அவரின் படங்களுக்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. பல விருதுகள் பெற்ற பாலா, இன்றும் தன் தனித்துவமான கதை சொல்லல் முறையுடன் தமிழ்த் திரைத்துறையில் தொடர்கிறார்.

television cinema

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் 1997-ஆம் ஆண்டு ரச்சகன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 2001-ல் தீனா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் மாஸ் ஆக்ஷன் கதைகளுக்கு புதிய வரையறை கொடுத்தார். கஜினி, ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்கள் அவரை இந்திய அளவிலான பிரபல இயக்குநராக மாற்றின. குறிப்பாக, கஜினி பாலிவுட்டிலும் மிகப்பெரிய ஹிட்டாகி, புதிய சாதனைகளை படைத்தது. தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இது தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஹிட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

television cinema

சுந்தர் சி

சுந்தர். சி 1995 ஆம் ஆண்டு முறைமாமன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு முறை மாப்பிள்ளை என்ற படத்தில் அருண் விஜய்யை அறிமுகப்படுத்தினார். ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல்ஹாசனின் அன்பே சிவம் போன்ற முக்கியமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவரின் காமெடி, ஆக்ஷன், குடும்பப்பாங்கான கதைகள் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கின்றன. தற்போது அரண்மனை தொடரின் புதிய பகுதிகள் மற்றும் பல பெரிய படங்களை இயக்கி, தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியான வெற்றியாளர் என திகழ்கிறார்.

90களில் திரைத் துறைக்கு வந்த பல இயக்குநர்கள் இன்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக, பல்வேறு திரைப்படங்களை வழங்கி வரும் இவர்கள் புதிய முயற்சிகளோடு ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே திரையுலகினரின் எதிர்பார்ப்பு.

- குரு கிருஷ்ணன்

More From
Prev
Next
English summary
Do you know how the directors those enter into cinema industry from 90's are successful?
Read Entire Article