ARTICLE AD BOX
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து மணப்பாறை யாகபுரம் என்ற பகுதியில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது.
Advertisment
இதனால் தாறுமாறாக ஓடிய பேருந்து சுமார் 30அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisment
Advertisement
க.சண்முகவடிவேல்