மச்சான்.. விழுந்த இடத்திலேயே, எழுந்துவிட்டாய்.. வருண் சக்கரவர்த்தியை பாராட்டிய சூர்யகுமார்

6 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய 33வது வயதில் முதல்முறையாக ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் வருண் சக்கரவர்த்தி களமிறங்கியுள்ளார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி இந்த எளிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் பத்து ஓவர் வீசி அவர் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சூர்யகுமார் பாராட்டு:

இதன் மூலம் வருண் சக்கரவர்த்தியை அரையிறுதியில் சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தியை மச்சான் என்று அழைத்துள்ளார்.

அதில் “இதே மைதானத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நீ விழுந்தாய். தற்போது அதே இடத்தில் மீண்டு வந்து அசத்தியிருக்கிறாய். எப்படி மச்சான் என்று கூறியிருக்கிறார்.” வருண் சக்கரவர்த்தி 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.ஆனால் வருண் சக்கரவர்த்தி மூன்று போட்டிகளில் துபாயில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

3 ஆண்டுகள் வாய்ப்பு இல்லை:

அந்தத் தொடரில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேறியது. அதன் பிறகு வருண் சக்கரவர்த்தி இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்த வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் தான் இந்தியாவில் இடம் பிடித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட் சிறப்பாக விளையாடியதை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட்டிலும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: 10 ஓவர் 45 ரன்.. ரோகித் இனியும் ஏமாற்ற வேண்டாம்.. ஒழுங்கா இதை செய்யுங்க – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

தற்போது அதிலும் அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தாம் விளையாட போகிறேன் என்று நேற்று இரவு தான் தெரியும் என்றும் இதனால் தான் பதட்டத்தில் இருந்ததாகவும் வருண் சக்கரவர்த்தி கூறினார்.

The post மச்சான்.. விழுந்த இடத்திலேயே, எழுந்துவிட்டாய்.. வருண் சக்கரவர்த்தியை பாராட்டிய சூர்யகுமார் appeared first on SwagsportsTamil.

Read Entire Article