மசினகுடியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி துவங்கியது

3 hours ago
ARTICLE AD BOX

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வெளி மண்டல வனப்பகுதிகளான மசினகுடி, சிங்காரா,சீகூர் வனச்சரகங்களில் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் வனப்பகுதிகளில் உள்ள நீராதாரங்களில் மழைநீர் நிறைந்து வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், வனப்பகுதிகளில் உள்ள இயற்கை குட்டைகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால் வனத்துறையினால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை தொட்டிகளில் முன்கூட்டியே நீர் நிரப்பும் பணிகளை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணிகளை துவக்கி உள்ளனர்.

The post மசினகுடியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article