மசாஜ் செண்டரில்.. மனைவியை வைத்து பலான வேலை விக்னேஷ்.! சென்னை போலீஸ் அதிரடி.!

3 hours ago
ARTICLE AD BOX

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்து வந்த 30 வயது பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரகசிய தகவல் 

சென்னையில் உள்ள அண்ணா நகர் மேற்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் இயங்கி வந்துள்ளது. இந்த மசாஜ் சென்டரை விக்னேஷ் என்பவர் நடத்தி வந்துள்ளார். இதில், விக்னேஷின் மனைவி பிரேமா (30 வயது) என்பவரும் சேர்ந்து மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. 

உறுதியான பலான தொழில்

இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பரிசோதித்தனார். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் பிரேமாவை கைது செய்தனர். 

பெண்கள் மீட்பு

மேலும் அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்கள் போலீஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article