மக்களே உஷார்...இதெல்லாம் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகளாம்...அலட்சியம் வேண்டாம்

4 days ago
ARTICLE AD BOX

சமீப காலமாக ஹாட் அட்டாக்கால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயதினருக்கு மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது? ஹார்ட் அட்டாக் வருவதற்கான அபாயம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் அறிகுறிகள் எவை என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

இதய தசைகளுக்கு தேவையான போதிய இரத்தம் கிடைக்காத போது ஏற்படும் இதய அவசர நிலைக்கு மாரடைப்பு என்று பெயர். அதாவது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கம் இரத்த நாளத்தில் (கரோனரி தமனி) அடைப்பு, கொலஸ்ட்ரால், இரத்த அணுக்கள், ஃபைப்ரின் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன பிளாக் உருவாவதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் தொடர்பான நோய்கள் இருந்தாலும் மாரடைப்ப ஏற்படும். நமக்கு மாரடைப்பு ஏற்படம் அபாயம் உள்ளது என்பதை ஏழு முக்கியமான அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதய தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளது. இதயத்தில் பாதிப்பின் அளவை பொறுத்து, தாக்கங்களும் மாறுபடும். அனைவருக்கும் ஒரே மாதிரியான மாரடைப்பு ஏற்பட வேண்டும், அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான முக்கிய அறிகுறிகள்.  

1. லேசான மார்பக சங்கடம் - கடுமையான வலி இல்லாமல் சிறிய அழுத்தம், இறுக்கம், அல்லது சற்றே சங்கடமாக உணருதல். 

2. வழக்கத்திற்கு மாறாக, எளிதில் கணிக்க முடியாத அளவிலான சோர்வு. போதிய ஓய்வுக்குப் பிறகும் மிகுந்த உடல் சோர்வு, காரணமில்லாமல் தூக்கமின்மை அல்லது திடீர் களைப்பு. 

3. மூச்சுத் திணறல் - ஓய்வெடுத்து இருக்கும் நேரத்திலும் கூட மூச்சு விட சிரமம், அல்லது லேசான செயல்பாடுகளின் போது மூச்சு முட்டி விடுதல். 
4. தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் - திடீரென மயக்கம், தலைசுற்றல், அல்லது உடல் வெப்பநிலை குறைந்து வியர்வை அதிகமாக தோன்றுதல். 

5. தாடை, கழுத்து, அல்லது முதுகு வலி - திடீர் கழுத்து, தாடை, அல்லது முதுகு வலி, இது சாதாரண தசை வலியாக தோன்றலாம். ஆனால் இதய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.  

6. கால்கள், பாதங்கள், மற்றும் கணுக்கால்களில் வீக்கம். உடலில் தண்ணீர் தேங்கி, இதயம் சரியாக செயல்படாமல் கால்கள், பாதங்கள், மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.

7. மூக்கடைப்பு மற்றும் செரிமான கோளாறு காரணமில்லாமல் திடீரென மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, அல்லது செரிமான கோளாறு, இது இதயத்தொடர்பான பிரச்சினையின் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். சரியாகி விடும் என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டும், வீட்டு வைத்தியம் செய்து சாப்பிட்டும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகவும். 

ஹார்ட் அட்டாக் தடுக்கும் வழிமுறைகள் :

சரியான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதே மாரடைப்பை தடுக்கும் ஒரே வழியாகும். போதைப் பொருட்களை தவிர்ப்பது, ஆரோக்கியமான, அளவான, முறையான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது, வழக்கமான உடற்பயிற்சி, மனஅழுத்தம் இல்லாமல் பாதுகாப்பது ஆகியவை மாரடைப்பு வராமல் தடுக்கும் மிக முக்கியமான வழிகளாக சொல்லப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, சரியான இடைவெளியில் இதய பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமானதாகும். குறைந்த கொழுப்பு மற்றும் சர்க்கரை மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது , வாரத்திற்கு குறைந்தது 150 நிமிட மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்வது ஆகியவை அவசியம்.

Read Entire Article