மகிழ்ச்சி செய்தி..! 8,997 சமையல் உதவியாளர் பணி… 4% இடஒதுக்கீடு..! தமிழக அரசு அரசாணை வெளியீடு…!

13 hours ago
ARTICLE AD BOX

பள்ளி சத்துணவுத் திட்டத்தில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிபுணர் குழு பரிந்துரையில் அடிப்படையில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடைபெறும். சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் தொய்வின்றி, நல்ல முறையில் செயல்பட இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை ரூ.3000 தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (எஸ்டிஎஸ்) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும். இந்த பணியிடங்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post மகிழ்ச்சி செய்தி..! 8,997 சமையல் உதவியாளர் பணி… 4% இடஒதுக்கீடு..! தமிழக அரசு அரசாணை வெளியீடு…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article