ARTICLE AD BOX
மகா சிவராத்திரியில் ஒரு நல்ல செய்தி.. இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்த தங்கம் விலை!
பிப்ரவரி 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தொடர் அதிகரிப்பிற்கு பிறகு இந்த மாதம் தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,050-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,782-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை கிட்டத்தட்ட அனைத்து நாட்களிலுமே ஏற்றத்தை கண்டது. இதனால் இன்று விலை குறையுமா? நாளை விலை குறையுமா? என்று புதிதாக நகை வாங்க இருந்தவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஏதுவாக இன்றைய தினம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது. இது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக சிவராத்திரி போன்ற சில புனித நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல இன்றைய தினம் தங்கம் விலை குறைந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்றைய (25/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,075-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,600-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,750-க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,809-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,472-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 88,090-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,640-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 53,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 66,400-க்கும் விற்பனையானது.
இன்றைய (26/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.25 குறைந்து ரூ. 8,050-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.200 குறைந்து ரூ. 64,400-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.250 குறைந்து ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.27 குறைந்து ரூ. 8,782-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.216 குறைந்து ரூ. 70,256-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.270 குறைந்து ரூ. 87,820-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.20 குறைந்து ரூ. 6,620-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.160 குறைந்து ரூ. 52,960-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.200 குறைந்து ரூ. 66,200-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,06,000-த்திற்கு விற்பனையாகிறது.