மகா கும்பமேளாவின் போது கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இருந்தது: நாடாளுமன்றத்தில் உறுதி

3 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்த போது கடந்த பிப்ரவரி 3ம் தேதி ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்பித்த அறிக்கையில், ‘கங்கை-யமுனை நதியின் பல இடங்களில் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிபார்ம் பாக்டீரியாக்கள் இருக்கிறது.

அவை குளிக்க, குடிப்பதற்கு உகந்ததாக இல்லை’ என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமாஜ்வாடி எம்பி ஆனந்த் பதவ்ரியா, காங்கிரஸ் எம்பி சுதாகரன் ஆகியோரின் கேள்விக்கு மக்களவையில் நேற்று பதிலளித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘‘பிப்ரவரி 28ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்பித்த புதிய அறிக்கையில் மகா கும்பமேளா நடந்த போது கங்கையில் நீரின் தரம் குளிப்பதற்கு உகந்ததாக இருந்ததாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது’’ என கூறினார்.

The post மகா கும்பமேளாவின் போது கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இருந்தது: நாடாளுமன்றத்தில் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article