ARTICLE AD BOX
16 வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தும், பலாத்காரம் செய்தும் வந்த கொடுமை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் பள்ளி படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது தந்தைக்கு 49 வயதாகும் நிலையில், அவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3 வருடங்களாக மகள் என்றும் பாராமல் அந்த சிறுமிக்கு அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை அளித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக உதவியாளர்; அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி.!
பலாத்காரம்
இது மட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகளை கட்டாயப்படுத்தி 3 முறை அவர் பாலியல் வன்கொடுமையும் செய்து இருக்கிறார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் வேறு விதமாகவும் அந்த சிறுமியை மிரட்டி வந்துள்ளார் தந்தை.
பாய்ந்த போக்ஸோ
இந்த கொடுமைகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பது உறுதியாகியது. இதனை தொடர்ந்து, அந்த கேவலமான செயலில் ஈடுபட்ட தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!