மகனுடன் இணைந்து பேட்டிங் செய்த ராகுல் டிராவிட்!

3 days ago
ARTICLE AD BOX

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அவரது மகனுடன் இணைந்து பேட்டிங் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அவரது இளைய மகன் அன்வே உடன் இணைந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ராகுல் டிராவிட் மற்றும் அவரது இளைய மகன் அன்வே இருவம் விஜயா கிரிக்கெட் கிளப் அணிக்காக யங் லயன்ஸ் கிளப் அணியை எதிர்த்து ஒன்றாக விளையாடினர்.

இதையும் படிக்க: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த விஜயா கிரிக்கெட் கிளப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் 6-வது வீரராக களமிறங்கிய ராகுல் டிராவிட் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின்போது, ராகுல் டிராவிட் அவரது மகன் அன்வேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்.

அன்வே 60 பந்துகளில் 58 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்தார். விஜயா கிரிக்கெட் கிளப் அணிக்காக ஸ்வப்னில் அதிகபட்சமாக 50 பந்துகளில் 107 ரன்கள் (12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தார்.

இதையும் படிக்க: 10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!

ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில், அவரது மூத்த மகன் சமித் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article