ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்திருந்த நிலையில் அந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சீமான் வீட்டுக்கு சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் கொடுக்க சென்றனர். அந்த சம்மனை சீமான் வீட்டு காவலாளிகள் கிழித்த நிலையில் அமல்ராஜ் என்பவர் துப்பாக்கியை எடுத்து போலீசாரை மிரட்டினார். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக மாறிய நிலையில் அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் போலீசாரை மிரட்டியது ஆகிய வழக்குகளில் இருவருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.