“போலீசருக்கே தண்ணி காட்ட நினைத்த பைக் ரைடர்”… தக்க பாடம் புகட்டிய போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!

3 hours ago
ARTICLE AD BOX

சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான சாகசங்களை செய்து புகழ் தேடுகின்றனர். இதனால் சாலை விதிகள் மீறப்படுகிறது, பாதசாரிகளுக்கும், பிற பயணிகளுக்கும் இடையூறாகவும் உள்ளதாக காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று போலீசாரின் டேஷ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சில பைக் ரைடர்கள் சாலையில் ஆபத்தான சாகசங்களை செய்து கொண்டே வண்டியை ஓட்டி செல்கின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்த வாகனத்தில் காவல்துறையினர் பின் தொடர்கின்றனர். அப்போது பைக்கில் சாகசம் செய்து கொண்டே பைக் மேலே ஏறி தனது தைரியத்தை காட்டுவதற்காக காவல்துறையிடம் கேலி செய்வது போல் பொறுப்பற்ற முறையில்  இளைஞர் ஒருவர் நடந்து கொள்கிறார். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே காவல்துறையினர் பைக்கை இடைநிறுத்தி இளைஞர்களை கைது செய்து காவல்துறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின் காவல்துறையினரை கேலி செய்த இளைஞர் காவல் நிலையத்தில்  அழுது கொண்டே தனது பெற்றோரை அழைத்து உதவி கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Action-Reaction Kinda Kalesh b/w a Boy and Police over doing Stunt on middle of the Road: pic.twitter.com/0a3W9tQCBC

— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 12, 2025

Read Entire Article