ARTICLE AD BOX
ரோம்: போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் சுவாசக்கோளாறு ஏற்ட்ட நிலையில் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 14ம் தேதி ரோமில் உள்ள ஜெமிலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவ குழுவினர் அவரை நாள்தோறும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளியன்று உடல்நிலை மோசமாகி பின்னர் சீரானது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அவர் நன்றாக ஓய்வெடுத்து வருவதாகவும், வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாகவும் வாடிகன் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் போப் நேற்று சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பரிசோதனையில் அவரது நுரையீரலில் இருந்து ஏராளமான சளியை மருத்துவர்கள் பிரித்தெடுத்து வெளியேற்றினார்கள். புதிய தொற்று பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post போப்புக்கு மீண்டும் வென்டிலேட்டர் சிகிச்சை appeared first on Dinakaran.