செர்பிய நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு: 3 எம்பிக்கள் காயம்

2 hours ago
ARTICLE AD BOX

பெல்கிரேட்: செர்பியாவின் நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் அங்கு புகை குண்டு வீசப்பட்டது. இதில் 3 எம்பிக்கள் காயமடைந்தனர். செர்பியாவில் கடந்த பல மாதங்களாக அரசியல் நெருக்கடி நிலவி வருகின்றது. மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். வடக்கில் நவம்பரில் ஒரு கான்கிரீட் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இதனால் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த சூழலில் செர்பிய நாடாளுமன்றத்தில் நேற்று பல்கலைக்கழகங்கள் கல்விக்கான நிதியை அதிகரிப்பது தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

முதலில் பிரதமர் மிலோஸ் வுசெவிக் மற்றும் அவரது அரசு ராஜினாமாவை நாடாளுமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் குழப்பமான சூழல் உருவானது. இதனை தொடர்ந்து அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகை குண்டுகளை நாடாளுமன்றத்தில் வீசினார்கள். இதில் மூன்று எம்பிக்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

The post செர்பிய நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீச்சு: 3 எம்பிக்கள் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article