ARTICLE AD BOX
பிப்ரவரி 14ஆம் தேதி போப் பிரான்சிஸ் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக ரோமில் உள்ள ஜெமேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமான இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரது இறுதி சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் ஜெர்ஜியோ அல்பியரி, லுகி கார்போன் ஆகியோர் கூறுகையில், “போப் பிரான்சிஸ் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளாரா? என்றால் அதற்கும் இல்லை என்று தான் சொல்வோம். இப்போது தான் அவரின் அறைக்குச் சென்று 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்து விட்டு வந்தோம். தற்போதைய நிலை என்பது இது தான். அவரும் ஒரு சாதாரண மனிதர் தான்” என்று கூறியுள்ளனர்
போப் பிராசின்ஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து வருவதால் போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் பதவியை நிரப்ப ஏற்கனவே பல பிரபலமான கார்டினல்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
போப்பின் மரணம் அல்லது ராஜினாமாவுக்குப் பிறகு கார்டினல்கள் மத்தியில் இருந்து அடுத்த போப் தேர்வு செய்யப்படுவார். ஜனவரி 22, 2025 நிலவரப்படி, மாநாட்டின் விதிகளின்படி, 252 கார்டினல்களில் 138 வாக்காளர்கள் உள்ளனர். சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பில் 80 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அமெரிக்க கத்தோலிக்க பிஷப்கள் மாநாட்டின் வலைத்தளத்தின்படி, ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும் வரை ஒவ்வொரு நாளும் நான்கு சுற்று வாக்களிப்பு நடைபெறும், இந்த செயல்முறை பொதுவாக 15 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும்.
The post போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்.. அடுத்த போப் யார்? வெளியான தகவல்! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.