போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு: புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்னையால் கடந்த 14 ஆம் தேதி, இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிக்கலான நுரையீரல் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறுநீரக நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் திங்கள்கிழமை (பிப்ரவரி 24) காலை ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் சுய நினைவுடன் இருக்கின்றார் என்றும், உடல்நிலை மோசமாக இருந்தாலும், மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பீடச்செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. இதனிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் சூழலில், அடுத்த போப் யார் என்பது பற்றிய ஊகங்களைத் தூண்டியுள்ளது.

கடந்த 600 ஆண்டுகளில் ஒரே ஒரு போப் (பெனடிக்ட் XVI ) மட்டும் தான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 1415 முதல், மற்ற அனைத்து போப்களும் பதவியில் இருக்கும் போதே இறந்துள்ளனர்.

Read Entire Article