ARTICLE AD BOX
போட்றா வெடிய.. தளபதி 69 படத்தின் தலைப்பு இதுதான்.. வேற லெவல் மாஸ்!!
தளபதி 69 படத்தின் தலைப்பு அதுவாக இருக்குமோ, இல்லை இதுவாக இருக்குமோ என கடந்த சில வாரங்களாக பல தலைப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்து வரும் தளபதி 69 படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 69 படத்தின் தலைப்பு இதுதான் என கூறி செம மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் தளபதி 69 படத்திற்கு `நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைத்துள்ளார்களாம். இதை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் `நாளைய தீர்ப்பு’ எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
follow our Instagram for the latest updates
The post போட்றா வெடிய.. தளபதி 69 படத்தின் தலைப்பு இதுதான்.. வேற லெவல் மாஸ்!! appeared first on EnewZ - Tamil.