ARTICLE AD BOX
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் வெளியிட்டார்.
இதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகமாயிருக்கும் என்று உறுதியாக கூறலாம். இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்." என்று தெரிவித்தார்.
கருத்து
இந்நிலையில், இரும்புக்காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் ஒழிப்பிலும் உலக அளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும், சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என்றும், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலக அளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.