ARTICLE AD BOX
போட்டி போட்ட முதலீட்டாளர்கள்.. மளமளவென உயர்ந்த என்ஐஐடி உள்பட 3 பங்குகள் விலை..
பங்குச் சந்தைகளில் வழக்கமாக காலை 9.15க்கு வர்த்தகம் தொடங்கி மாலை 3.30 மணிக்கு நிறைவடையும். அதேசமயம் வர்த்தகம் தொடங்குவதற்கு முந்தைய அமர்வு காலை 9 மணி முதல் 9.15 வரை நடைபெறும். சந்தை தொடக்கத்திற்கு முந்தைய அமர்வில் வர்த்தகர்கள் தங்கள் ஆர்டர்களை பதிவு செய்யலாம், மாற்றம் செய்யலாம். வர்த்தக தொடக்கத்துக்கு முந்தைய நேரத்தில், S&P சென்செக்ஸ் 0.16 சதவீத சரிவுடன் தொடங்கியது. அதேவேளையில், என்ஐஐடி, டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் வினாட்டி ஆர்கானிக்ஸ் ஆகிய நிறுவன பங்குகளுக்கு நல்ல தேவை காணப்பட்டது. இதனால் இந்நிறுவன பங்குகளின் விலை உயர்வுடன் ஆரம்பித்தது.

என்ஐஐடி லேர்னிங் சிஸ்டம்ஸ் லிமிடெட்
புரோபஷனல் மற்றும் மேலாண்மை பயிற்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் என்ஐஐடி லேர்னிங் சிஸ்டம்ஸ் லிமிடெட். பங்குச் சந்தையில் இன்று காலையில் இப்பங்கு விலை 8.02 சதவீதம் உயர்ந்து ரூ.472க்கு வர்த்தகமானது. இந்நிறுவனம் எந்தவொரு எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. மேலும் இந்நிறுவனம் தொடர்பாக எந்தவொரு பாசிடிவ்வான செய்தியும் வரவில்லை. எனவே இப்பங்கின் ஏற்றத்தின் பின்னணியில் சந்தை சக்திகள் மட்டுமே இருந்திருக்கும்.
டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்
டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட். பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, டிவிஎஸ் ஹோல்டிங் பங்கு விலை 5.24 சதவீதம் உயர்ந்து ரூ.9,000க்கு வர்த்தகமானது. இந்நிறுவனம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடதா நிலையில் இப்பங்கின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சந்தை சக்திகளால் மட்டுமே இந்த உயர்வு ஏற்பட்டு இருக்கும் என தெரிகிறது.
வினாதி ஆர்கானிக்ஸ்
வினாதி ஆர்கானிக்ஸ் ரசாயனங்கள உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் ஐபிபி மற்றும் ஏடிபிஎஸ் ரசாயன சேர்மங்கள் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 6.54 சதவீதம் உயர்ந்து ரூ.114.05க்கு வர்த்தகமானது. இந்நிறுவனம் எந்தவொரு எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை. எனவே இப்பங்கின் ஏற்றத்தின் பின்னணியில் சந்தை சக்திகள் மட்டுமே இருந்திருக்கும்.
Story written by: Subramanian