ARTICLE AD BOX

டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டுடன் பாஜகவினர் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலை வரை மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக பாஜகவின் மகளிர் அணியினர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை டாஸ்மாக் கடைகளில் மாட்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொள்ளும் போஸ்டரை திமுகவினர் டாஸ்மாக் கடைகளில் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “சங்கிகளின் கவனத்திற்கு, இந்த கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை” என்ற வாசகத்துடன் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் படமும் அச்சிடப்பட்டுள்ளது.
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பது எல்லா அத்தியாயத்துக்கும் உண்டு, இதுதான் இயற்கை
இதை யாராலும் மாற்ற முடியாது
தமிழகத்தில் பாஜக வுக்கு மூடு விழா தான் சூப்பர் ஆடு pic.twitter.com/K7IuUAjIGo