ARTICLE AD BOX
செய்முறைத் தேர்வையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்
இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 14-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது. மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
The post பொதுத்தேர்வு… இரவு நேரத்திலும் தடையில்லா மின்சாரம்…! மின்வாரியம் அதிரடி உத்தரவு appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.