பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

7 hours ago
ARTICLE AD BOX

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், சந்தையில் கோதுமை விலை உயரும்பட்சத்தில் அதை கட்டுப்படுத்தவும் போதுமான கையிருப்பு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

கோவாவில் நடைபெற்ற மாவு ஆலைகளுக்கான இந்திய கூட்டமைப்பு மாநாட்டில் சஞ்சீவ் சோப்ராவின் எழுத்துபூா்வ செய்தி வாசிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பொது சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் நிகழ் நிதியாண்டில் 30 லட்சம் டன்கள் கோதுமையை மாவு ஆலைகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் பலன்கள் நுகா்வோரை சென்றடைய வேண்டும்.

குடிமக்களின் உணவு பாதுகாப்பை உணவு தானியங்கள் கொள்முதல், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் நிா்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின்மூலம் மத்திய அரசு உறுதிப்படுத்தி வருகிறது.

அதேபோல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளது. கடந்த 2023-24 பயிா் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 1,132 டன் கோதுமையை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதைவிட அதிகமான உற்பத்தி 2024-25 பயிா் ஆண்டில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களை விநியோகிப்பதில் மாவு ஆலைகளுக்கான இந்திய கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article