ARTICLE AD BOX
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கும் விற்பனையானது.
வாரத் தொடக்கமான திங்கள்கிழமை தங்கம் விலையில் எவ்வித மாற்றமின்றி சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க: சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ, 64,600 வரை விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.8,010-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் ரூ. 104.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,900-க்கும் விற்பனையாகிறது.