பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்… எதிரே வந்த கார்… பதற வைக்கும் காட்சிகள்… வைரல் வீடியோ..!!!

7 hours ago
ARTICLE AD BOX

பொதுவாக மலைப்பாதை மற்றும் காடுகளின் வழியே பைக் ஓட்டுவதற்கு முன் அனுபவம் தேவை. கூர்மையான திருப்பங்கள், செங்குத்தான சரிவுகளில் மிக கவனமாக வண்டியை ஓட்டி செல்வதற்கு அதிக அனுபவம் மிகவும் முக்கியமானது. ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று மலைப்பாதைகளில் பைக் ஓட்டிச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

இந்த வீடியோவில் ஒரு இளைஞர் ஹெல்மெட் அணியாமல் ஒரு மலைப்பாதையில் வேகமாக பைக்கை ஓட்டி வருகிறார். திடீரென வரும் வலப்புறத் திருப்பத்தில் வேகத்தை குறைக்க முடியாமல் நிலைத்தடுமாறி  எதிரே வந்த காரின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறார். இதனை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சமூக ஆர்வலர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல், பிரேக் பிடிக்காமல் வேகமாக வண்டியை திருப்பிய  இளைஞரை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து உள்ளது.

Rash Riding leads to a Bad Collision with a Car
pic.twitter.com/pbtVlktKjl

— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 16, 2025

Read Entire Article