குடும்பம் கிடைத்தது..! ஹிருதயப்பூர்வம் படப்பிடிப்பு குறித்து மாளவிகா நெகிழ்ச்சி!

15 hours ago
ARTICLE AD BOX

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, அதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் சத்யன் அந்திகாட் நடிகர் மோகன்லால் கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் கிடைத்தது

இந்நிலையில் நடிகை மாளவிகா தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளதாவது:

ஹிருதயப்பூர்வம் என்ற படத்தின் என் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். என்ன ஒரு அழகான மாதம் இது.

ஒரு படத்திலிருந்து இன்னொரு படத்துக்கு மாறும்போது நண்பர்கள், நெருங்கிய நண்பரல்லாதவர்கள், நம்பிக்கைகுரியவர்கள் எனக் கிடைப்பார்கள். ஆனால், அரிதாகத்தான் குடும்பம் கிடைக்கும். இது அப்படிப்பட்டதுதான்.

இது அழகான, வெதுவெதுப்பான, உடல் நலத்திற்கு ஏற்ற, இதயப்பூர்வமானது. எனது அகம் மகிழ்ச்சியால் மன ஊட்டம் அடைகிறது. இது அரிதான உணர்வு இல்லையா?

லெமன் டீ அதிகமாகக் குடித்தேன்

மோகன்லால், சத்யான் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களைப் பார்ப்பது, அவர்கள் என்னை வழிநடத்துவது, வாழ்க்கையில் எப்படி சினிமாவின் அற்புத்தத்தைக் கொடுக்கிறார்கள், இதையெல்லாம் அவர்கள் மரியாதையாக அழகாக செய்கிறார்கள்.

மிகவும் திறமைசாலியான மனிதர்களுடன் வேலைப் பார்ப்பது, தேக்கடியின் மலைப்பகுதியில் அழகான மாதமாக கழிந்தன. லெமன் டீ அதிகமாகக் குடித்து குளிர்ச்சியான மாலையை இதமாக்கினேன். அன்பான துணை இயக்குநர்கள் இல்லாமல் இந்தப் படம் இப்படி உருவாகியிருக்காது என்றார்.

Read Entire Article