ARTICLE AD BOX
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக புதன்கிழமை அமெரிக்காவின் ஃபுளோரிடா அருகே கடல் பகுதியில் பாராசூட்கள் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(மார்ச் 18) காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் தரையிறங்கியுள்ளது.
விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு உலகம் முழுவதும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
"விண்வெளிக்குச் சென்று அங்கு 9 மாதங்களாக இருந்து பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோருக்கு பாராட்டுகள்.
அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்த விண்வெளி வீரர்கள் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.