கோவை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்: அடையாளம் தெரிந்தது

3 hours ago
ARTICLE AD BOX

கோவை: கோவை அருகே, பாதி உடல் எரிந்த நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோவையில், இன்று காலை, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண்ணின் உடலைப் பார்த்த மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறை, உடல் கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அக்கம் பக்கத்தில் யாரேனும் காணாமல் போனதாக புகார் அளித்தவர்களின் விவரங்களை எடுத்து, அவர்களை அழைத்து கொலையானவரின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.

அதில், ஒரு பெண் காணாமல் போனதாக மகன், மகள் அளித்த புகாரில் தொடர்புடைய பெண்தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

பெண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்க.. செல்போனில் கூகுள் பே, போன் பே இருக்கிறதா? கவனம்! ஏப். 1 முதல் புதிய விதிமுறை!!

அப்போது அவர் சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், அவரை நேற்று முதல் காணவில்லை என அவரது மகன் மற்றும் மகள் தெரிவித்திருந்த நிலையில் காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் தேடி வந்த நிலையில் இன்று காலை காணாமல் போன ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஆசிரியர் பயணித்த வாகனம் மட்டும் கிடைத்த நிலையில், அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஆசிரியர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

அவருக்கு பல பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் விசாரணையில் உறுதிப்படுத்தாமல் வெளியில் தெரிவிக்க முடியாது.

தற்போதைக்கு சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Read Entire Article