பேச்சு நம் ஆளுமையை வெளிப்படுத்தும்... சரிதானே?

8 hours ago
ARTICLE AD BOX

ம்முடைய பேச்சுத்திறமை நம் ஆளுமையை வெளிப்படுத்தும். சிந்திக்கும் எண்ணம் தெளிவாக இருந்தால் அதை வெளிப்படுத்தும் திறன் நன்றாக இருக்கும் என்ற அவசியமில்லை. அதுவே சிந்திக்கும் எண்ணம் ஒருவருக்கு தெளிவாக இருந்து அதை வெளிப்படுத்தும் பேச்சுத் திறமையும் நன்றாக இருந்தால் அவர்கள் வாழ்வில் வெற்றி என்பது வெகு சுலபமாக இருக்கும். ஒருவர் வீட்டில் இருக்கும் நபர்களுடன் பேசுவதும், தொழில் ரீதியாக பிறரிடம் பேசுவதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. 

1) கூற வரும் விஷயத்தில் புரிதல்  இருப்பது:

வீட்டில் இருக்கும் நபர்களுடன் பேசுவதற்கு எந்த ஒரு அளவுகோலோ, இப்படித்தான் பேசவேண்டும் என்ற வரைமுறையோ கிடையாது. அதுவே தொழில் ரீதியாக பேசும்போது நம்முடைய பேச்சும், உச்சரிப்பும், அதில் உள்ள கருத்தும் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். நாம் எதைப் பற்றி பேச விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தெளிந்த ஞானமும்,  அறிவும், சிறப்பான பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

2) கருத்தில் தெளிவு:

தொழில் ரீதியாக பேசும்பொழுது ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது கூடாது.  வளவளவென்று பேசாமல் நாம் கூறவரும் விஷயத்தை எதிர்தரப்பிற்கு புரியும்படி தெளிவாக, சரியான நேரத்தில் கூறும் திறன் வேண்டும். எதைப்பற்றி கூற வருகிறோமோ அந்த கருத்தில் குழப்பமோ, மாறுபட்ட கருத்தோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3) தடுமாற்றம் கூடாது:

பேசும்போது வார்த்தைகளில் தடுமாற்றம் கூடாது. பேசும் பேச்சும் தெளிவாக எதிர் தரப்பினருக்கு புரியும் விதத்தில் குளறுபடி இல்லாமல்,  போதுமான சத்தத்துடன் பேசுவதும், பேச்சில் பதற்றமோ, தடுமாற்றமோ, குழப்பமோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கை யுடன் பேச பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அதென்ன‌ நாற்பது வயதில் நாய்க் குணம்... ஆண்களுக்கு மட்டும் தானா?
Speech reveals our personality.

4) பேச்சின் வேகம்:

சிலர் பேசும்போது தாங்கள் கூற வரும் கருத்துக்களை மிக விரைவாக படபடவென்று பேசி விடுவார்கள். இது எதிராளிக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துகொள்ள முடியாமல் போகும். இன்னும் சிலரோ நின்று நிதானமாக ஜவ்வு போல் இழுத்து பேசுவார்கள். பேச  வேண்டியதை சுருக்கமாக அழகாக பேசாமல் இழுத்தடிக்கும் பொழுது எதிர் தரப்பினருக்கு அவருடைய பேச்சின் மீது கவனம் செல்லாது. எரிச்சல்தான் வரும். எப்போது நிறுத்த போகிறார் என்ற எண்ணம்தான் மேலோங்கும்.

5) சுவாரசியமாக பேசுவது:

நம்முடைய பேச்சு எதிராளியை வசப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். தேவையற்ற பயமும், பதற்றமும்தான் நம் பேச்சுத் திறனுக்கு எதிரிகள் என்பதை உணரவேண்டும். சரியான முறையில், சரியான இடத்தில் கருத்தை வெளிப்படுத்தும் போது நம்முடைய உடல் மொழியும், முக பாவனைகளும், குரலில் ஏற்றத்தாழ்வும் நம்முடைய பேச்சை எதிர்பரத்தினர் சுவாரஸ்யமாக கேட்கத் தூண்டும்.

6) விமர்சனங்களை வரவேற்க தயாராவது:

நம் பேச்சு நல்ல விதத்தில் அமைந்தாலும், எதிர்த்தரப்பினரை அதிகம் கவர்ந்தாலும் பெரும்பாலான சமயங்களில் பார்வையாளர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வரலாம். விமர்சனங்களுக்கு பயந்து நாம் நம் கருத்தை வெளிப்படுத்த தயங்கக் கூடாது. சிறந்த பேச்சாளர்கள் விமர்சனங்களை வரவேற்பார்கள். அதில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக்கொள்ள தயங்கவும் மாட்டார்கள்.

Read Entire Article