ARTICLE AD BOX
குழந்தைகள் எப்போதும் முயற்சிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைப் பெறும் வழிகளை ஊக்குவியுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கை, கிரியேட்டிவிட்டு மற்றும் மீண்டெழும் திறன் ஆகியவற்றை வளர்க்கிறது. அவர்களை தவறுகள் செய்ய அனுமதியுங்கள். அதில் இருந்து அவர்கள் கற்கவேண்டும். அது அவர்களுக்கு அவசியம். அவர்கள் வளரவும், பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், தங்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுங்கள்.
கிரியேட்டிவிட்டி
கிரியேட்டிவாக அவர்கள் எதைச் செய்தாலும் அதை தடுக்கக்கூடாது. அவர்களை அதை தொடர்ந்து செய்ய நீங்கள் அறிவுறுத்தவேண்டும். அவர்கள் ஓவியம் தீட்டுவது, எழுவது, இசையமைப்பது என எதைச் செய்தாலும் அதை ஊக்குவியுங்கள். கிரியேட்டிவிட்டி, பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அவர்கள் தங்கள் உணர்வுகளை கிரியேட்டிவாகவும், அர்த்தமுள்ள வழிகளில் வெளிப்படுத்தவேண்டும்.
கேள்விகள்
உங்கள் குழந்தைகள் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டால் அதைத் தடுக்கக்கூடாது. அவர்கள் தொடர்ந்து கேள்விகள் கேட்க வலியுறுத்தவேண்டும். கற்றலுக்கு ஆர்வம்தான் வழிவகுக்கிறது. எனவே குழந்தைகள் கேள்வி கேட்கும்போது அவர்களை தடுக்கக்கூடாது. மாறாக ஊக்குவிக்கவேண்டும். இது அவர்களுக்கு கிரிட்டிக்கல் சிந்தனைகளை வளர்க்கிறது. அவர்கள் பல்வேறு பாடங்களை புரிந்துகொள்ள உதவுகிறது.
புதிய விளையாட்டு
அவர்களை பல்வேறு விளையாட்டுக்களை விளையாட ஊக்குவிக்கவேண்டும். அவர்கள் விளையாட்டுக்களில் இருந்தும், உடற் பயிற்சிகளில் இருந்தும் ஒழுக்கத்தை கற்கிறார். குழுவாக இணைந்து வேலை செய்வது மற்றும் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்வது என இருக்கிறார்கள். எனவே அவர்கள் பல்வேறு விளையாட்டுக்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நீங்கள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். இதனால் அவர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த விளையாட்டை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கை கல்வியைக் கற்கிறார்கள். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மீண்டெழும் திறன் என அனைத்தையும் பெறுகிறார்கள்.
புதிய நண்பர்கள்
சமூக உறவுகள் உங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் அனுதாபத்தைக் கொடுக்கிறது. எனவே உங்கள் குழந்தைகள் புதிய நபர்களுடன் பேசுவதை ஊக்குவிக்கவேண்டும். நண்பர்களிடம் இருந்து அவர்கள் மதிப்புமிக்க பாடத்தை கற்கிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது, அனுதாபம் போன்றவற்றை கற்கிறார்கள்.
மனதில் உள்ளதை பேச அனுமதியுங்கள்
உங்கள் குழந்தைகள் அவர்களின் மனதில் உள்ளதை பேசட்டும். எந்த அச்சமுமின்றி அவர்கள் மனதில் உள்ளதை கூறும்போது, அது அவர்கள் திறந்த உரையாடலை செய்ய உதவுகிறது. அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. நேர்மையை வளர்க்கிறது. எதிர்காலத்தில் அவர்கள் தலைமைப் பண்புகளை ஏற்கவைக்கிறது.
தவறுகளில் இருந்து கற்றல்
உங்கள் குழந்தைகளுக்கு தோல்வி என்பது வளர்ச்சியின் அங்கம் என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்கள் அதிலிருந்து மீண்டு எழுவதற்கு முயற்சிக்கவேண்டும். மாறாக அவர்கள் சரியாக செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த தேவையில்லை. இது அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும். அவர்களுக்கு மதிப்புமிக்க வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.
மேலும் வாசிக்க - பெற்றோருக்கு உரிய குறிப்புகள்
வீட்டு வேலைகளில் உதவி
உங்கள் குழந்தைகள் வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவவேண்டும். அவர்கள் சமையல், சுத்தம் செய்தல் மற்றும் வேலைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அவர்களுக்கு மதிப்பீடுகள், குழுவாக வேலை செய்வது மற்றும் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்வது என உதவுகிறது. நீண்ட காலம் அவர்களுக்கு உதவுகிறது.
இயற்கை
வெளியுலக சாகசங்களில் ஈடுபட உங்கள் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும். அது அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுகிறது. ஆர்வம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அவர்களை மரங்கள் ஏற அனுமதியுங்கள், காடுகளில் உலவட்டும் அவர்கள் இயற்கையை அனுபவிக்கட்டும்.
வழக்கத்துக்கு மாறான ஆர்வங்களை அவர்கள் பின்பற்றட்டும்
ரேபாடிக்ஸ், நடிப்பு, வானியல் என அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் செய்ய அனுமதியுங்கள். அவர்களுக்கு எல்லைகள் வேண்டாம். இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான ஆர்வங்கள் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும். எதிர்காலத்தில் அவர்களுக்கான சரியான பாதைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க அவர்களை அனுமதிக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்