சென்னை வட கறி: சென்னை ஃபேமஸ் வட கறி செய்வது எப்படி? -இட்லி, தோசைக்கு செம சைட் டிஷ்

5 hours ago
ARTICLE AD BOX

சென்னை வடகறி செய்யத் தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 200 கிராம்

காய்ந்த மிளகாய் - 3

தக்காளி - 2 நறுக்கியது

உப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

தண்ணீர்

கொத்தமல்லி இலை - நறுக்கியது

சோம்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய்

பிரியாணி இலை - 2

கிராம்பு

வெங்காயம் - 2 நறுக்கியது

பச்சை மிளகாய் - 5 கீறியது

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

பட்டை

ஏலக்காய் - 2

சோம்பு - 1 தேக்கரண்டி

அன்னாசிப்பூ - 1

சென்னை வட கறி செய்முறை

சென்னை வட கறி செய்வது எப்படி என பார்ப்போம். நன்கு கழுவிய கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பானில் அரைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுக்கவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து கலந்து விடவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானவுடன் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து கலந்து விடவும்.

இதையடுத்து, தக்காளி வெந்தவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும். சுவையான வட கறி தயார்.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article