Gardening Tips: கடும் வெயிலிலும் அழகான ரோஜா பூக்கள் பூக்க வேண்டுமா? ரோஜா செடியை இப்படி பராமரிங்க

4 hours ago
ARTICLE AD BOX

குளிர்காலத்திற்குப் பிறகு ரோஜா செடிகளுக்கு கவனமான பராமரிப்பு தேவை. இதற்கு சரியான உரம், நீர், பூச்சி கட்டுப்பாடு மற்றும் கத்தரிப்பு தேவை. பிப்ரவரியில், அதாவது கோடை தொடக்கத்தில் இந்த வேலைகளைச் செய்தால், பின்னர் ரோஜா பூக்கள் நன்றாக பூக்க ஆரம்பிக்கும்.

குளிர்காலத்தில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ரோஜா செடி ஓய்வு நிலைக்குச் செல்கிறது. வெப்பநிலை குறைவாக இருப்பதால் அது வளர்வதை நிறுத்திவிடும். இலைகள் உதிர்ந்து ஆரம்பிக்கும். ஆனால் பருவகால மாற்றத்துடன் மீண்டும் பூக்க ஆரம்பிக்கும்.

  • பிப்ரவரியில் மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
  •  பச்சை நிறம் வெளிவரும்
  •  மென்மையான கிளைகள் உருவாகும்.

இந்த மாற்றங்கள் உங்கள் வீட்டு செடிகளிலும் காணப்பட்டால், உங்கள் ரோஜா செடியை பராமரிக்க வேண்டும் என்று அர்த்தம்.

கிளைகளை கத்தரிப்பது

முதலில் எந்த கிளைகளையும் அல்லது சேதமடைந்த பகுதியையும் அகற்றவும். இது புதிய தண்டு, கிளைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உலர்ந்த கிளைகளை அகற்றுவதன் மூலம் காற்றோட்டம் அதிகரிக்கும். சரியான கத்தரிக்கோலைப் பயன்படுத்தி செடியை கத்தரிக்க வேண்டும். மேலும், உலர்ந்த மற்றும் சேதமடைந்த கிளைகளை அகற்ற வேண்டும்.

செடி அடிப்பகுதியை சுத்தம் செய்வது அவசியம்

ரோஜாக்கள் அடர்த்தியாக வளரவும், நோய்களிலிருந்து செடியைப் பாதுகாக்கவும் ஆரோக்கியமான மண் தேவை. எனவே, செடி இருக்கும் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உதிர்ந்த இலைகளை அடிப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும். அவை பூஞ்சை மற்றும் பூச்சிகளுக்கு வாழ்விடமாக உள்ளன. செடி அடிப்பகுதியில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். அவை செடிக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெற தடையாக உள்ளன. நீர் வடிந்து காற்று சுற்ற அனுமதிக்க மண்ணை அலச வேண்டும்.

சரியான ஊட்டச்சத்துக்கள்

குறிப்பாக குளிர்காலத்திற்குப் பிறகு ரோஜா செடிகளுக்கு அதிக உரம் போட வேண்டும். இயற்கை உரம் மற்றும் வாழைப்பழத் தோலைப் போட வேண்டும். அடிப்பகுதிக்கு உரம் போட்டு இலைகள் காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நீர்

குளிர்காலத்தில் ரோஜா செடிகளுக்கு அதிக நீர் தேவையில்லை. ஆனால் அவை பூக்க ஆரம்பித்தவுடன், தேவையான அளவு நீரை ஊற்றவும். இலைகளின் மேல் நீர் தெளிக்க வேண்டாம். அது பூஞ்சைத் தொற்றுக்கு காரணமாகலாம். மண்ணைச் சோதித்து, அது ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் வறண்டு போயிருக்கிறதா என்று பாருங்கள், அந்த நேரம் நீர் பாய்ச்சலுக்கு ஏற்றது என்று அர்த்தம்.

கோடையில் பூஞ்சை போன்ற தொற்றுகள் அதிகமாக காணப்படும். எனவே, அவற்றை வேப்ப எண்ணெய் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். பறவைகள் வரும் இடத்தில் நீங்கள் செடிகளை வைத்திருந்தால், அவை பூச்சிகளை சாப்பிடும். நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் செடிகளை வைக்க வேண்டும். அதிகமாக நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவும்.

Manigandan K T

TwittereMail
மணிகண்டன், முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர். அச்சு ஊடகம், டிஜிட்டல் ஊடகம் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். செய்திகளை மொழிபெயர்ப்பு செய்தல், பயணம், சினிமா, கிரிக்கெட் சார்ந்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் தேசம், சர்வதேசம், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article