ARTICLE AD BOX
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் இந்தி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பறையில், இந்தி கவிதை சொல்ல முடியாமல் திணறிய 3ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்தி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.