"பெர்ஃப்யூம்" யூஸ் பண்றவங்க இத கொஞ்சம் படியுங்க!

3 days ago
ARTICLE AD BOX

ண்கள் பெண்கள் என வேறுபாடு இன்றி அனைவரும் "பெர்ஃபியூம்" எனப்படும் வாசனை திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் இடங்கள், பயன்படுத்தக் கூடாத இடங்கள் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை இப்பதிவில் காண்போம்.

வாசனை திரவியங்கள் பயன்படுத்தக் கூடாத இடங்கள்

* வாசனை திரவியங்களில் ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் உள்ளதால் இதனை முகம் மற்றும் கண்களிலிருந்து விலக்கி வைக்கவேண்டும்.

* அக்குள்களில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதுவதால் தோல் எரிச்சல் மற்றும் சொறிகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை பயன்படுத்தக்கூடாது குறிப்பாகஅக்குளில் அண்மையில் ஷேவ் செய்திருந்தால் வாசனை திரவியங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

* அந்தரங்கப் பகுதிகளைச் சுற்றி வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது எரிச்சல் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துவதால் இதனை தவிர்க்க வேண்டும்

* கீறல் அல்லது காயம் உள்ள இடத்தில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதால் எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.

* வாய் மற்றும் மூக்கைச் சுற்றி வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதன் இரசாயனங்கள் உடலுக்குள் நுழைந்து தீங்கு விளைவிக்கும்.

* வயிறு மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள தோலில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதால் எரிச்சல் ஏற்படலாம், குறிப்பாக உங்கள் சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால் வாசனை திரவியம் பயன்படுத்த வேண்டாம்.

*காதுக்குள் அல்லது அதைச் சுற்றி வாசனை திரவியத்தை பயன்படுத்துவதால் எரிச்சல் மற்றும் தொற்று ஏற்படுவதால் அங்கு பயன்படுத்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
முடிகொட்டும் பிரச்னைக்கு முடிவு கட்டும் 5 பானங்கள் எவை தெரியுமா?
Those who use "perfume" read this a little!

பெர்பியூம் பயன்படுத்தும்போது தொற்றை தடுப்பது எப்படி?

* உங்கள் தோலில் வியர்வை மற்றும் அழுக்கு இருந்தால், வாசனை திரவியத்தைப் பயன்படுத்த வேண்டாம். இது எரிச்சல் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தும்.

* ஷேவிங் செய்த உடனேயே வாசனை திரவியத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் வாசனை திரவியத்தில் உள்ள ரசாயனங்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தும்.

* ஒரு புதிய வாசனை திரவியத்தைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், ஒரு சிறிய பகுதியில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து ஒவ்வாமை உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து பயன்படுத்துங்கள் .

*வாசனை திரவிய பாட்டிலின் முனையை சுத்தமாகவும் மூடியதாகவும் வைத்திருங்கள். இதனால் தூசி அல்லது பாக்டீரியாக்கள் அதில் நுழையாது.

தரமான பெர்பியூம் முக்கியம்

* நல்ல தரம் மற்றும் தூய்மையான வாசனை திரவியங்களைத் தேர்வு செய்து பயன்படுத்துவது தொற்றுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களில் இருந்து காக்க உதவும் .

* நேரடியாக உள்ளிழுக்காதபடி திறந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள். இதன்மூலம் சுவாசப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

* அதிகப்படியான வாசனை திரவியத்தை பயன்படுத்துவது தோல் தொற்றுக்களை ஏற்படுத்தும் என்பதால் அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இளநரை பிரச்னையா? காரணங்கள் என்ன? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Those who use "perfume" read this a little!

எங்கெங்கு பயன்படுத்தலாம்?

மணிக்கட்டுகள், கழுத்து, காதுகளுக்குப் பின்னால் மற்றும் முழங்கைகள் போன்ற இடங்களில் வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள். இது வாசனை திரவியத்தின் நறுமணத்தை நீண்ட நேரம் நீடிக்க செய்ய்யும். உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

மேற்கூறிய முறையில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

Read Entire Article